2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மூளையை திண்ணும் அமீபா: 9 வயது சிறுமி உயிரிழப்பு

Editorial   / 2025 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் தமரசேரி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடும் காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 14-ம் திகதி சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சிறுமியின் இறப்புக்கான காரணம் குறித்து நுண் உயிரியியல் பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது சிறுமியின் மூளையில் அரியவகை அமீபா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. மூளை திசுக்களை திண்ணும் இந்த அரிய வகை அமீபா மாசடைந்த ஏரி, குளம், ஆறுகளில் இந்த வகை அமீபா உயிர் வாழும். இந்த நீர்நிலைகளில் குளித்தால், மூளைவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதையடுத்து சிறுமி வசித்த பகுதிகளில் நீர்நிலை கண்டறிப்பட்டவுடன், அங்கு குளித்தவர்கள் அடையாளம் காணப்பட்டு பரிசோதனை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில், அரியவகை அமீபா பாதிப்பு காரணமாக இறந்த நான்காவது நபர் இந்த 9-வயது சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X