2021 மே 06, வியாழக்கிழமை

மஹரகமயில் 17 பேருக்கு தொற்று உறுதி

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹரகம- பமுனுவ வீதியில் உள்ள மொத்த துணி வர்த்தக நிலையங்களில் பணிபுரிந்த 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையங்களில் பணிபுரிந்த 46 பேருக்கு செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு பண்டிகைக்கான ஆடை கொள்வனவுக்காக பெருந்திரளான மக்கள் கொரோனா பரவலையும் கவனத்தில் எடுக்காமல், மஹரகம பிரதேசத்தில் திரண்டிருந்த நிலையில், அங்குள்ள வர்த்தக நிலையமொன்றின் பணியாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பிலிருந்த 16 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .