2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மாணவர்கள் துஸ்பிரயோகம்: காலியில் ஒருவர் கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 12 , மு.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி பிரதேசத்தில் பல பாடசாலை மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

காலி பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களின் முறைப்பாட்டின்படி, குறித்த நபர்  கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

உனவடுன பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வாட்ஸ்எப் மூலம் சிறுவர்களுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர், பிரபல ஆலயம் ஒன்றை நடத்தி வரும் மதகுரு என்ற போர்வையில் சிறுவர்களை ஈர்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி நீதவான் நீதிமன்றில முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் ஆகஸ்ட் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X