R.Maheshwary / 2021 ஏப்ரல் 12 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வார்த்தைப் பிரயோகம், வேதனைக்குரிய விடயமாகும் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், அதனை வன்மையாக கண்டித்துள்ளார்.
அத்துடன், எமது சமூகத்துக்கென்று மானமும் மரியாதையும் உள்ளதென்பதை ஜீவன் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் அனுதாபத்தில் வழங்கிய வாக்குகளால் வந்தவர் இன்று சமூகத்தையே விமர்ச்சிக்கின்றார் என்றார்.
கொட்டகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்த அநாகரீகமான கருத்து குறித்து வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
ஜீவனின் இந்தக் கருத்தைக் கண்டிப்பதுடன் எமது சமூகத்துக்கு இவ்வாறான ஒருவர் தேவையா என சிந்திக்கத் தோன்றுகின்றது. தனக்கும் ஆறுமுகன் தொண்டமானுக்கும் பல அரசியல் பிளவுகள்இ கருத்து முரண்பாடுகள் காணப்பட்டாலும் அவரது வாயில் இருந்து கூட இவ்வாறானதொரு வார்த்தை வந்ததில்லை என்றார்.
மலையகத் தாய் கொடுத்த கல்வியிலும் மலையகத் தாய்மார் கொடுத்த வாக்குகளாலுமே இவ்விடத்தில் அனைவரும் இருப்பதாகத் தெரிவித்த அவர், மலையகத் தாயைப் பற்றி பேசும் போது எமது சமூகம் மானம், மரியாதைக் கொண்டவர்களும் உழைத்து வாழ்பவர்களுமே மலையக மக்கள். இன்று பெருந்தோட்ட பெண்கள், சட்டத்தரணிகளாகவும், அரச உத்தியோகத்தர்களாகவும் உள்ளனர்.
எனவே, அவர்களது தாத்தா, பாட்டன் காலத்தைப் போன்று அடிமையாக வைத்து பேச இப்போது முடியாது. இவரது கருத்தால் வெட்கித் தலைகுனிவதோடு, ஏனைய சமூகம் மலையகப் பெண்களை கேவலமாகப் பார்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமது அரசியல் வரலாற்றில் இவ்வாறான சொற் பிரயோகங்களை எந்தவொரு பெரும்பான்மை அரசியல்வாதியும் பேசியதில்லை என தெரிவித்தார். எனவே மலையகத்தில் இவ்வாறான ஓர் அரசியல்வாதியையோ அரசியலையே அனுமதிக்கப் போவதில்லை என்றார்.
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago