Janu / 2026 மே 03 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முயிசு (Mohamed Muizzu), இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (03) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
ஜனாதிபதியுடன் அவரது பாரியார் மற்றும் 20 உயர் அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவினரும் வருகை தந்துள்ளனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை (03) மாலை 5:33 மணியளவில் மாலைத்தீவின் மாலே நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ‘யு.எல்-116’ (UL-116) ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
வருகை தந்த மாலைத்தீவு ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினரை வரவேற்பதற்காக பிரதமர் ஹரினி அமரசூரிய உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, ஜனாதிபதி முகமது முயிசு உள்ளிட்ட தூதுக்குழுவினர் எதிர்வரும் 06-ஆம் திகதி மீண்டும் மாலைத்தீவு நோக்கிப் புறப்படவுள்ளனர்.
டி.கே.ஜி. கபில

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .