Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 14 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான நுகர்வோர்களின் கேள்விகளுக்குத் தீர்வு காண்பதற்காக, அவசர தொலைபேசி இலக்கத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய மின்சாரக் கட்டணம் தொடர்பான தகவல்களைப் பெற மின்சார நுகர்வோர் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை 0775687387 என்ற பிரத்தியேக தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண அதிகரிப்பு குறித்து வரும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கட்டணக் கணக்கீடுகள் மற்றும் நுகர்வோர் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் குறைப்பதற்கு தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் நுகர்வோருக்கு உதவ விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சேவைக்கு மேலதிகமாக, பொதுமக்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் 0112392607 அல்லது 0112392608 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலம் info@pucsl.gov.lk அல்லது consumers@pucsl.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ ஆணைக்குழுவை தொடர்புகொள்ள முடியும்.
2 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago