2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மின்சாரத்தால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், 2019 ஆம் ஆண்டில் மின்சார விபத்துகள்  காரணமாக 103 இறப்புகள் பதிவாகியுள்ளதுடன், 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  2019 ஆம் ஆண்டில், தென் மாகாணத்தில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 30 ஆக காணப்படுவதாக, குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், 2019 ஆம் ஆண்டில், மின்சார விபத்துகளால் மேற்கு மாகாணத்தில் குறைவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதே காலப்பகுதியில்,  ஏனைய மாகாணங்களில் பதிவான மின்சார மரண வீதங்களுடன் ஒப்பிடும்போது,  இது நாட்டில் ஏற்பட்ட மிக உயர்ந்த எண்ணிக்கையாக கருத்தப்படுகிறது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .