Freelancer / 2025 ஜனவரி 04 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்சாரம் தாக்கிக் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆலயத்தில் அமைந்துள்ள கேணியைத் துப்புரவாக்கும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன்போது நீர் இறைக்கும் இயந்திரத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டமையால் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்தார்.
அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 45 வயதுடைய கார்த்திக் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். (a)
13 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago