2025 ஜூலை 09, புதன்கிழமை

மின்சார ரயில் சேவை கண்டியில் ஆரம்பம்

Editorial   / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதலாவது மின்சார ரயில் சேவை கண்டி நகரில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீர அந்த திட்டத்தை ஆரம்பிக்கும் பணிகளை துரிபதப்படுத்துமாறும் பணித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந்த ரயில் போக்குவரத்து திட்டத்தின் படி ரம்புக்கனையிலிருந்து கடுகன்னாவை வரையிலும்,  கடுகன்னாவையிலிருந்து கண்டி, கடுகஸ்தொட  வரையிலும் இரட்டை பாதைகள் மூலம் ரயில் சேவை முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

மேலும் குண்டசாலை பகுதியையும் உள்வாங்கும் வகையில் கம்பளை வரையில் இத்திட்டத்தை விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த அவர், கண்டி குட் செட் பஸ் தரபிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதியை போக்குவரத்து மய்யமாக மேம்படுத்தி அங்கிருந்து சுரங்களி ரயில் பாதையொன்றை தலதா மாளிகை வழியாக அமைக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .