2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

மின்னல் தாக்கம்: தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது

Editorial   / 2026 ஏப்ரல் 14 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எச்.எம். சியாஜ் 

புத்தளம், கடையாகுளம் பகுதியில் திங்கட்கிழமை (13) இரவு ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாகத் தென்னை மரம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த கடும் வறட்சியுடனான காலநிலையில், திங்கட்கிழமை முதல் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இவ்வாறானதொரு காலநிலையிலேயே, கடையாகுளம் பகுதியில் உள்ள தென்னை மரம் ஒன்றின் மீது மின்னல் தாக்கியதில் அது தீப்பற்றி எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீண்ட கால வறட்சிக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் காலநிலை மாற்றம் காரணமாகப் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .