2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படாது

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசரகால நிலையின் கீழ் நாளொன்றுக்கு 2 மணத்தியாலங்கள் மின்சாரத் தடையை முன்னெடுக்க எடுத்தத் தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதென, போக்குவரத்து முகாமைத்துவ, மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடன் எல்லை அதிகரித்துச் செல்வதன் காரணமாக, கெரவலப்பிட்டிய மின்உற்பத்தி நிலையத்துக்கு எரிபொருள் விநியோகத்தை தடைசெய்ய எரிபொருள் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக,இதன் மின்உற்பத்தி நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டமையால், மின்துண்டிப்பை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் மின்துண்டிப்பால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக அமைச்சரவையின் கவனத்துக்குக் கொண்டு வந்து அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று, கெரவலப்பிட்டி மின்உற்பத்தி நிலையத்துக்கு எரிபொருளை விநியோகிக்குமாறு இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .