2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மீண்டும் ஆரம்பிக்கும் ஏரோஃப்ளோட் சேவை

Freelancer   / 2022 செப்டெம்பர் 24 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த விமான சேவையை ஒக்டோபர் 9ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஒக்டோபர் முதல் வாராந்தம் இரண்டு விமானங்கள் இயக்கப்படும் என்றும் பங்கொக் மற்றும் கோவாவுக்கான வழமையான விமான சேவைகள் இடம்பெறும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜூன் மாதம் கொழும்புக்கு வருகை தந்த ஏரோஃப்ளோட் அயர்லாந்து நிறுவனத்தின் மனு காரணமான கொழும்பு வரர்த்தக நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பின்னர், அது நீக்கப்பட்டதுடன், அண்மையில் அமைச்சர் பந்துல குணவர்த்தனவும் விமான விவகாரம் குறித்து பகிரங்கமாக மன்னிப்புக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X