R.Maheshwary / 2021 மார்ச் 30 , மு.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
. எம். றொசாந்த்
திருநெல்வேலி மத்தி, வடக்கு கிராம சேவையாளர் பிரிவு நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்டது எனத் தெரிவித்த நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன், அப்பகுதி முடக்கப்பட்டு உள்ளதால், அங்கு வாழும் குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலி சந்தையிலும் அதைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்களிலும் சனிக்கிழமை (27) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது, 127 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது,
அதில், 51 பேர் திருநெல்வேலி மத்தி, வடக்கு கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து குறித்த கிராம சேவையாளர் பிரிவு, ஞாயிற்றுக்கிழமை (28) முதல் முடக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்குள், வெளியில் இருந்து உள்நுழையவும், அப்பகுதியிலிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதிக்குள் 1,100 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் எனத் தெரிவித்த அவர், அதில் அநேகமானவர்கள் திருநெல்வேலி சந்தையில் தொழில் புரிபவர்களும் கூலித் தொழிலாளிகளும் உள்ளடங்குகின்றனர். ஆகையால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க உறவுகள் முன்வர வேண்டுமெனக் கோரிக்கைவிடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .