Editorial / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தேசிக்கப்பட்ட அரசியலமைப்பில் இலங்கையின் பெயரை மாற்ற வேண்டுமென்ற யோசனையை பிவிதுரு ஹெல உறுமய சார்பில் முன்வைப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சரும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில, நாடுகள் ஜனநாயகமாகக் காணப்படுவது, குடியரசாவது பெயர்களில் அல்ல; செயற்பாட்டுகளிலேயே உள்ளன என்றார்.
இலங்கையின் பெயர், 'ஸ்ரீ லங்கா குடியரசு' என மாற்றப்பட வேண்டுமென்ற யோசனையை, முன்வைப்பதாகத் தெரிவித்த அவர், 'ஒரே நாடு- ஒரே சட்டம்' என்பதின் கீழ்,தேச வழமைச் சட்டம், முஸ்லிம் திருமணச் சட்டம், கண்டிய திருமணச் சட்டம் உள்ளிட்ட அனைத்துத் தனியார்இ பிரதேசவாத சட்டங்களும் நீக்கப்பட்டு, ஒரே சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்' என்றார்.
ஐந்து வருடங்கள் ஆட்சி செய்யும் ஓர் அரசாங்கம், நாட்டுக்கு வருவாயை ஈட்டித்தரும் தேசிய வளங்களை 99 வருட குத்தகைக்கு வழங்குவதைத் தடுக்க வேண்டும். வளத்தையும் குத்தகைக்கு வழங்குவதாயின் இது தொடர்பான யோசனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மையைப் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
'சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்பட்டதும் நீதிமன்றத்தில், அச்சட்டத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாது. கடந்த காலங்களில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தின் போது, நீதிமன்றத்தைத் தவிர்த்து, பாராளுமன்ற செயற்குழுக் கூட்டத்தில் தான் அரசியலமைப்புக்கு முரணான சட்டத் திருத்தம் உள்வாங்கப்பட்டது' என்றார்.
'புதிய அரசியலமைப்பில் இலங்கையின் ஆட்சி முறைமை ஒற்றையாட்சி என்பதைத் தெளிவாகவும் உறுதியாகவும் குறிப்பிட வேண்டும். அத்துடன், பௌத்த மதத்தைப் பிரதான அரச மதமாக ஏற்று அங்கிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், பாராளுமன்றத்துக்கு ஜனாதிபதி பொறுப்புக் கூற வேண்டும். ஜனாகிபதியின் செயற்பாடுகளைப் பாராளுமன்றக் குழு விசாரணைக்கு உட்படுத்தும் உரிமையை பாராளுமன்றத்துக்கு வழங்க வேண்டும். ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து, ஆறு மாதத்துக்கு ஒரு தடவை பாராளமன்றத்தில் விவாதம் இடம்பெற வேண்டும்' என்றார்.
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
55 minute ago
1 hours ago