Simrith / 2025 ஜூன் 05 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இன்று (05) கைது செய்யப்பட்ட காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் எம்.ஆர். ஸ்ரீமதி மல்லிகா குமாரி சேனாதீர, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு கொழும்பு வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை கொள்முதல் செயல்முறையை மேற்கொள்ளாமல் பண்டிகை நடவடிக்கைகளுக்குச் செலவழித்து அரசாங்கத்திற்கு 276 இலட்சம் ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் இன்று (05) அவர் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய பின்னர், கொழும்பு தலைமை மேல்நீதிமன்ற நீதிபதி தனுஜா லக்மாலி, தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு பிணையில் அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago