Freelancer / 2026 ஏப்ரல் 29 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மே 4 ஆம் திகதி த.வெ.க. தலைவர் விஜய்யின் விசில் புரட்சிதான் நடைபெற இருக்கிறது என்று த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நாளை தமிழகத்தை ஆளப்போகிற தலைவர் (விஜய்) திருச்செந்தூருக்கு சென்று முருகனை வழிபட்டு சென்றிருக்கிறார்.
இது ஒரு சிறந்த நாள். அவருடைய தொலைநோக்கு சிந்தனை, நாளை தமிழகத்தை ஆளுவது, மக்களால் ஒரு மனதாக அவரை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய எண்ணங்களாக இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை உலகளவில் முதலில் பசுமை புரட்சி, வெண்மைப் புரட்சி, இனப் புரட்சி, சமூகப் புரட்சி தான் நடந்திருக்கிறது. ஆனால் வரும் 4 ஆம் திகதி த.வெ.க. தலைவர் விஜய்யின் விசில் புரட்சிதான் நடைபெற இருக்கிறது. 200 இற்கும் மேற்பட்ட இடங்களில் த.வெ.க. வெற்றி பெறும் என்று தெரிவித்தார். (a)
31 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026