2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மின் கட்டணத்தைக் குறைத்தால் பரிசுகள்

Gavitha   / 2017 ஜனவரி 30 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த சில மாதங்களில், மின்சாரப் பட்டியல் கட்டணத்தைக் குறைக்கின்ற வாடிக்கையாளர்களுக்கு, போட்டி முறையில் பரிசுகளும் வெகுமதிகளும் பல சலுகைகளும் வழங்கும் திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். 

தற்போது நாட்டில் நிலவிவரும் நெருக்கடி நிலைமையினை இல்லாது ஒழித்து, மின்சாரத்தைத் தட்டுப்பாடு இன்றிப் பெற்றுக்கொடுப்பதற்காகவே இத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக, கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.  மேலும்,இந்நெருக்கடி நிலைமையைச் சமாளிக்கும் பொருட்டு, அவசர மின் உற்பத்தி இயந்திரங்களைக் கொள்வனவு செய்யவுள்ளதாகவும், அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X