2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் விடாது

Kogilavani   / 2017 ஜனவரி 19 , மு.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

'ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை வழங்குவதற்கு நாட்டின் கலாசாரம் மற்றும் தனித்துவப் பண்பாட்டுக்கு முரணாண நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாம்' எனக் கேட்டுக்கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், சலுகைக்களுக்காக கலாசாரம் பாதிக்கப்படுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் அனுமதியளிக்காது என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் வெளிவிகாரங்கள் தொடர்பான துணை தலைமைப் பொறுப்பாளர் டீட்மர் கிறிஸ்லர் தலைமையிலான குழுவினருடன் கொழும்பில்  நேற்று (18) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.


ஐரோப்பிய தூதுக் குழுவினரிடம் முதலமைச்சர் தெரிவித்ததாவது,


'நாட்டின் தனித்துவப் பண்பாட்டு கலாசாரங்களுக்குப் புறம்பான  நிபந்தனைகளை முன்வைப்பதன் நாட்டில் மேலும் பல புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கவே வழிவகுக்கும்.


அத்துடன், இலங்கை பல்லின மத கலாசாரங்களைப் பின்பற்றுபவர்களைக் கொண்ட நாடு, எனவே இவற்றை கருத்திற் கொண்டு, நிபந்தனைகள் இன்றி ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வரவேண்டும்.


அத்துடன், நாட்டின் மத மற்றும் நல்லிணக்கத்துக்கு எதிரான நிபந்தனைகள் முன்வைக்கப்படுமாயின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.


நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்  செயற்பாடுகளுக்கு  ஐரோப்பிய ஒன்றியம் உதவியளிக்க வேண்டும். இதன் மூலம் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும்.


ஜி.எஸ்.பி பிளஸ் வழங்கும் போது  கிழக்கில் தற்போது தலைவிரித்தாடிவரும்  வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் முகமான தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் முன்வர வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .