2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

யானை தாக்கி ஒருவர் பலி

Editorial   / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

ஆனமடுவ- வள்பாளுவ பிரதேசத்தில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம், இன்று (02) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வள்பாளுவ- லீகொலவெவ பகுதியைச் சேர்ந்த, 54  வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், தனது வீட்டுக்கு பின்புறமாக சென்ற போதே, காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

யானையின் தாக்குதலில் காயமடைந்த இவர், ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .