Nirosh / 2021 மார்ச் 15 , பி.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.கணேசன்)
போலி செய்திகளை சமூகமயப்படுத்துவதில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கைத்தேர்ந்தவரென அமைச்சர் சி.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மெராயா பகுதியில் இன்று (15) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், தற்போதைய ஜனாதிபதி திருடனாக இருந்ததும் இல்லை. திருடனாக மாற போவதும் இல்லை. மக்கள் நம்பிக்கைக்கு அமைய ஜனாதிபதி ஆட்சி புரிகின்றாரெனவும் தெரிவித்தள்ளார்.
“அதேபோல் ரணிலும் கள்ளன். ரணிலும் பொய் கூறுவதில் சிறந்தவர். வாக்குகளை பெறுவதே அவர்களின் நோக்கம். வாக்குகளை பெற்ற பின்னர் அவர்கள் இந்த பகுதிக்கு வருவதில்லை.
கொழும்பில் இருந்தே அவர்கள் மக்கள் பிரச்சினையை தீர்த்தனர். யாழ்ப்பாணத்திற்கு அதிகளவு சேவைகளை செய்தவர் தற்போதைய பிரதமராவார்.
யானை, யானை என்றார்கள் அதில் எந்த புண்ணியமும் இல்லை. தற்போது தொலைப்பேசி அதிலும் புண்ணியமில்லை. தற்போது தொலைப்பேசியில் மின் சேமிப்பு இல்லை. அது செயலிழந்துள்ளது.
இப்போது அது வேலை செய்வதில்லை. நாம் மக்களின் பொறுப்பை ஏற்றது போல் செயற்படுகின்றோம். ஆகவே இரண்டு கால் யானையையும் நாம் விரட்டியுள்ளோம். யானை வேலிகளை அமைக்க உள்ளோம். அதனை எடுத்த எடுப்பில் செய்ய முடியாது. எமது ஆட்சியில் யானை – மனித மோதலுக்கு தீர்வு வழங்கப்படும்” என்றார்.
3 minute ago
13 minute ago
18 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 minute ago
18 minute ago
33 minute ago