2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யானைகளுக்குத் தட்டுப்பாடு

Kogilavani   / 2017 ஜனவரி 17 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வருடம் நடைபெறவுள்ள பிரதான மூன்று பெரஹெராக்களின்போது, 40 யானைகளைக் கொண்டுவருவதில், சிக்கல் தோன்றியுள்ளதாக, ருஹுணு கதிர்காமம் மஹா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேயான டி.பி.குமாரதுங்க தெரிவித்துள்ளார்.  

பெரஹெராக்களில் பங்குபற்றுவதற்காக பயிற்றுவிக்கப்படும் யானைகள், வனவிலங்கு திணைக்களத்தினூடாக, யானைகள் சரணாலயத்தில் விடப்பட்டமையே இப்பிரச்சினைக்கு காரணமாகும் என்றும் அவர் கூறினார்.  

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,   

“பெரஹெராக்களில் 40 யானைகள் பங்கேற்ற நிலையில், தற்போது 30 யானைகளே உள்ளன. மீதமுள்ள 10 யானைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.   

சுமார், இரண்டு ஆண்டுகளாக, வனவிலங்குத் திணைக்களத்தின் பாதுகாப்பில், 39 யானைகள் இருந்தன. ஆனால், இத்தொகை, தற்போது குறைவடைந்துள்ளது. பெரஹெராக்களில் பங்கேற்கும் யானைகளை பயிற்றுவிப்பதற்கு, நீண்டகாலம் தேவைப்படுகின்றது” என்று அவர் கூறினார்.  

“எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பெரஹெராவில், 40 யானைகளைப் பங்கேற்கச் செய்ய வேண்டும். இவ்விடயத்தை, நாங்கள் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லவுள்ளோம்” என்றும், அவர் மேலும் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .