Freelancer / 2026 ஏப்ரல் 12 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரது வீடுகள் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ளன. இந்தநிலையில், சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்துக்கு மர்ம நபர் ஒருவரிடம் இருந்து நேற்று முன்தினம் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், ‘நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷின் வீடுகளில் இன்னும் சற்று நேரத்தில் குண்டுகள் வெடிக்கும்’ என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த மின்னஞ்சலை அனுப்பியது யார் என்பதை கண்டறியும் பணியில் சைபர் க்ரைம் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கு இதுபோன்ற மிரட்டல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. சற்று ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளதால் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். (a)
35 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
4 hours ago