2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ரயிலில் மோதி மாணவர்கள் பலி

Editorial   / 2019 மார்ச் 02 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலபிட்டியில், ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவரும் மாணவியொருவரும் பலியாகியுள்ளனர்.

16 வயதுடைய மாணவனும் 15 வயதுடைய மாணவியுமே,  இவ்வாறு பலியாகியுள்ளனர்.

இரண்டு மாணவிகளும் மாணவனொருவனும், ரயில்வே தண்டவாளத்தில் நடத்துச் சென்றபோதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரயில் வருவதைக் கண்ட மாணவன், ஒரு மாணவியை ஒரு பக்கம் தள்ளிவிட்டு, மற்றைய மாணவியைக் காப்பாற்ற முயன்றபோதே, மாணவியுடன் சேர்ந்து ரயிலில் மோதி பலியாகியுள்ளார் எனத் தெரியவருகின்றது. உயிரிழந்த மாணவி, அலைபேசியில் உரையாடிக்கொண்டு நடந்துச்சென்றுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .