Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில்வேத் திணைக்களத்தினால் பயணிகளுக்கு தற்போது வழங்கப்படும் பயணச்சீட்டுக்குப் பதிலாக இலத்திரனியல் பயணச்சீட்டை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக ரயில்வேத் திணைக்களத்தின் பொது முகாமையாளர் பி.ஏ.ஜி ஆரியதாச தெரிவித்தார்.
தற்போது வழங்கப்படுகின்ற பயணச்சீட்டுக்குப் பற்றாக்குறை ஏற்படுகின்ற சந்தரப்பத்தில், ரயில்வே ஊழியர்களினால் கையால் எழுதப்பட்டும் பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ரயில்வேத் திணைக்கள ஊழியர்களின் அசௌகரியங்களை குறைப்பதற்காக இந்த புதிய இலத்திரனியல் பயணச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இலத்திரனியல் பயணச்சீட்டை பெற்றுகொள்வதற்கு ரயில் நிலையத்தில் இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளன.
ஒரு இயந்திரத்தின் மூலம் ரயில் நிலைய ஊழியர்கள் மூலம் பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம். மற்றைய இயந்திரத்தில் பணத்தினை உட்செலுத்தி பயணிகளே பயணச்சீட்டை பெற்றுகொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய நடைமுறையை இன்னும் 6 மாதங்களின் பின்னர் நடைமுறைப்படுத்தவுள்ளதாக ரயில்வேத் திணைக்களத்தின் பொது முகாமையாளர் மேலும் கூறினார்.
37 minute ago
9 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
9 hours ago
15 Aug 2025