2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டம்

Freelancer   / 2022 மார்ச் 31 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்கு தேவையான அளவு நிலக்கரியை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி  குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான தீர்மானங்கள் அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்

எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு பின்னரே மீண்டும் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படும்.

ஏப்ரல் மாதம் வரை இறக்குமதி செய்ய வேண்டிய நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு நாணய கடிதம் விடுவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டு வருவதாகவும் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X