Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஜூன் 28 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்ஷெட்பூர் : பள்ளி பாடங்களை, 'ஒன்லைனில்' படிக்க வசதியாக ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு, 12 மாம்பழங்களை, ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, தொழிலதிபர் ஒருவர் மாணவிக்கு உதவி செய்துள்ளார்.
ஜார்க்கண்டில் உள்ள ஜம்ஷெட்பூரை சேர்ந்தவர் துள்சி குமாரி, 11 ஆம் வகுப்பு மாணவி. இவரது தந்தை ஸ்ரீமல் குமார், சாலையோரத்தில் பழங்களை விற்று வருகிறார். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து, 'ஒன்லைன்' வழியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன.
ஆனால், துள்சி குமாரியிடம், ஸ்மார்ட் போன் இல்லாததால், அவரால், ஒன்லைனில் படிக்க முடியவில்லை. பெண்ணுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்க, குமாரிடம் வசதியில்லை. இது பற்றி தகவல் அறிந்த மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அமியா ஹீட்டே, ஜம்ஷெட்பூருக்கு வந்து, துள்சியை தேடி கண்டுபிடித்தார்.
துள்சியிடம், தலா, 10 ஆயிரம் ரூபாய்க்கு, 12 மாம்பழங்களை வாங்கினார். துள்சியின் தந்தையின் வங்கி கணக்குக்கு, ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயை உடனடியாக, ஒன்லைன் வழியாக செலுத்தினார். 'இந்த பணத்தை வைத்து, ஸ்மார்ட் போன் வாங்கி, ஆன்லைனில் தொடர்ந்து படிக்க வேண்டும்' என, துள்சியிடம் ஹீட்டே கேட்டுக் கொண்டார். மேலும், ஒரு ஆண்டுக்கான இன்டர்நெட் இணைப்பு கட்டணத்தையும், துள்சிக்கு ஹீட்டே வழங்கினார்.
2 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
8 hours ago