2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

விசாரணைக்காக டில்லிக்கு சென்றார் விஜய்

Freelancer   / 2026 ஜனவரி 12 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

த.வெ.க. தலைவர் விஜய் கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக டில்லியிலுள்ள சி.பி.ஐ அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
 
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
 
அதன்படி, இன்று காலை 11 மணி அளவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் முன்னிலையாவதற்காக தனி விமானம் மூலம் டில்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
 
தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி டில்லி பொலிஸிடம் அக்கட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .