2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வடக்கின் மீனவ அபிவிருத்திக்கு திட்டம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ், ப.பிறின்சியா டிக்சி

வட மாகாணத்துக்கான நிலையான மீனவ அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அடிப்படை வேலைத்திட்டச் செயற்பாடுகளுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து, 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் முற்பணக் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளதாக, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். 

அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், நேற்று நடைபெற்ற போதே, அவர் இதனைக் கூறினார்.  

தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே, இந்த அங்கிகாரம் வழங்கப்பட்டது. 

இதனூடாக, வட மாகாணத்தைச் சேர்ந்த 40,000 குடும்பங்கள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X