2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வன்புணர்வுக் குற்றச்சாட்டு; ஐ.ம.சு.மு ’தங்கமான உறுப்பினர்’ கைது

Editorial   / 2019 பெப்ரவரி 28 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

16 வயதுடைய சிறுமியொருவரை, பாலியல் வண்புணர்வுக்கு உள்ளாக்கினாரென்ற குற்றச்சாட்டில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தென் மாகாணசபை உறுப்பினர், காலியின் தங்கமான உறுப்பினர் என்றழைக்கப்படும் கிருஷாந்த புஷ்பகுமார, இன்று (28) கைதுசெய்யப்பட்டார்.

குறிறித்த குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள அவர், தனத சட்டத்தரணியூடாக, பொலிஸில் இன்று சரணடைந்த போதே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 23ஆம் திகதியன்று, அக்மீமன - பட்டதுவ பிரதேச தேவாலயமொன்றில் (விகாரைகளில் காணப்படும் கடவுள் மண்டபம்) வைத்தே, மேற்படி சிறுமியை அவர் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட உறுப்பினரை, காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .