2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வரட்சி சவால் குறித்து ‘அவதானம் செலுத்தவும்’

Gavitha   / 2017 ஜனவரி 20 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, எதிர்காலத்தில் முகங்கொடுக்கவுள்ள வரட்சி சவால் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு உலக உணவுத்திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் Ertharine cousine தெரிவித்துள்ளார். 

சுவிஸ்சர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பணிப்பாளர் Ertharine cousineக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். 

விசேடமாக விவசாயத்துறை முகங்கொடுக்கும் பிரச்சினை, நீர்மின்சார உற்பத்தி தொடர்பில் முகங்கொடுக்கக்கூடிய பிரச்சினை குறித்தும் கவனஞ்செலுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

எனினும், மின்சார உற்பத்திக்காக எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக, பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், எதிர்வரும் 10ஆம் திகதியன்று, இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .