2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வரட்சியால் 1½ இலட்சம் பேர் பாதிப்பு

Niroshini   / 2017 ஜனவரி 16 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் வரட்சியால், 11 மாவட்டங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 49 ஆயிரத்து 598 பேர், இதுவரையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.   

திருகோணமலை, கண்டி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, பதுளை, அநுராதபுரம், யாழ்ப்பாணம்,பொலன்னறுவை, குருநாகல், மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே, கடுமையான வரட்சி நிலவுகின்றது.   

திருகோணமலையில், 440 குடும்பங்களைச் சேர்ந்த 1,381 பேரும்; கண்டியில் 679 குடும்பங்களைச் சேர்ந்த 2,510 பேரும்; கம்பஹாவில் 2,107 குடும்பங்களைச் ரேச்ந்த 8,647 பேரும்; ஹம்பாந்தோட்டையில் 3,578 குடும்பங்களைச் சேர்ந்த 14,334 பேரும்; மொனராகலையில் 180 குடும்பங்களைச் சேர்ந்த 820 பேரும்; பதுளையில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேரும்; அநுராதபுரத்தில் 412 குடும்பங்களைச் சேர்ந்த 1,505 பேரும்; யாழ்ப்பாணத்தில் 24,324 குடும்பங்களைச் சேர்ந்த 85,461 பேரும்; மன்னாரில் 10,235 குடும்பங்களைச் சேர்ந்த 34,765 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த நிலையம் அறிவித்துள்ளது.   

தற்போது நாட்டில் நிலவுகின்ற வரட்சியான நிலைமையில், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.   
20ஆம் திகதிக்கு பின்னர், நாட்டில் ஆங்காங்கே, அவ்வப்போது மழையை எதிர்பார்க்கலாம் என்றும் அத்திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.   

இதேவேளை, நுவரெலியாவில் இன்று பனி பொழியும் என்றும் அத்திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியாவில் ஆகக்குறைந்த வெப்பநிலை 5 பாகை செல்சியசாகும். ஆகக் கூடிய வெப்பநிலையான 23 பாகை செல்சியஸ், திருகோணமலையில் பதிவாகியுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .