2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வரட்சியால் பாதிப்பா? 117க்கு அறிவிக்கவும்

Kogilavani   / 2017 ஜனவரி 17 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிநீர்ப் பிரச்சினை மற்றும் வரட்சியினால் பாதிக்கப்படுபவர்களுக்கு என, இடர்முகாமைத்துவ மத்திய நிலையம், 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளது.   

இந்தத் தொலைபேசி இலக்கம், 24 மணிநேரமும், சேவையில் இருக்கும் என்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.   

கடுமையான வரட்சி காரணமாக, குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களிலுள்ள நிலத்தடி நீரில் உப்புநீர் கலந்துவிடும் அபாயம் நிலவுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், குறித்த மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.   

இன்னும் சில நாட்களுக்கு வரட்சி நீடிக்குமாயின் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படும். ஆகையால், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவிப்புக்கு அமைவாக, தண்ணீரைச் சிக்கனமாகப் பாவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .