Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 26 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
வரவு-செலவுத் திட்டம் (பாதீடு) மீதான வாக்கெடுப்பின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அதற்கு ஆதரவாக வாக்களிக்குமெனத் தெரிவித்துள்ள ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, அதனால், இம்முறை வரவு-செலவுத் திட்டத்தை எதிர்க்கட்சியினால் தோற்கடிக்க முடியாது என்றார்.
பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில், நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வரவு-செலவுத் திட்டத்துக்கான கௌரவத்தையே அரசாங்கம் இல்லாது செய்துள்ளதோடு, பண்டாரநாயக்கவின் குடும்பத்தை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன பிளவுப்படுத்தியதுபோல, ராஜபக்ஷர்களின் குடும்பத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், பிளவுப்படுத்த முடியாதெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
வரவு-செலவுத்திட்டத்தில் வெற்றிபெறுவதற்காக, ஐ.தே.க அரசாங்கம் இலஞ்சம் வழங்கியுள்ளதாக, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்ததோடு, ஏப்ரல் ஐந்தாம் திகதி, வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
13 minute ago
20 minute ago
25 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
25 minute ago
35 minute ago