Editorial / 2026 பெப்ரவரி 06 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்
வேலணை - புங்குடுதீவு வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு பகுதியில் அண்மைக்காலமாக வன்முறை கும்பலை சேர்ந்தவரின் அச்சுறுத்தல் அதிகரித்து மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக பலதரப்பட்டவர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரு வாள்கள் மற்றும் ஒரு அபாயகரமான கோடாரி உட்பட சில பொருட்களும் கைதானவர்களிடம் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் ஊர்காவற்றுறை பொலிஸார் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026