Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அ.அரசரட்ணம்
யாழ். வலி. தென் மேற்கு பிரதேசத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர் இனங்காணப்பட்டமையைத் தொடர்ந்து, இந்நோயை ஏற்படுத்தும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாகப் பெய்த பருவமழையைத் தொடர்ந்து, ஆனைக்கோட்டை, மானிப்பாய், உயரப்புலம் ஆகிய பகுதிகளில் 32 பேர், டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறுகிய நாட்களில் அதிகளவிலான டெங்கு நோயாளர் இனங்காணப்பட்டுள்ளதை அடுத்து, இந்நோயை மேலும் பரவ விடாமல் தடுக்க முன் வந்துள்ள சுகாதாரப் பிரிவினர், புதன்கிழமை (07) அதிக நோயாளர் இனங்காணப்பட்ட மானிப்பாய் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தலைமைக் காரியாலயத்துக்கு பின்புறமாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் நுளம்பு சம்பந்தமான ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வில், பயிற்சியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பரிசோதகர் உட்பட திணைக்களத்தைச் சேர்ந்த ஆய்வு உத்தியோகத்தர்களும் பங்கு பற்றினர்.
9 minute ago
16 minute ago
21 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
21 minute ago
31 minute ago