Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
J.A. George / 2023 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொற்றுநோய் நிலைமை காரணமாக வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த நடமாட்டத் தடைகளை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் ஒரு கைதி மற்றும் சிறை அதிகாரி அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் நோய் பரவுவதைக் குறைக்க உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிறை வளாகத்திற்குள் நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதிக்க சிறைத்துறை நடவடிக்கை எடுத்தது.
கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாடுகள் இன்றுடன் (07) முடிவடைய உள்ளதாக வவுனியா பிராந்திய தொற்றுநோய் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி நாளை (08) முதல் வழமை போன்று அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு வவுனியா சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் உள்ள சிறைச்சாலைகளுக்கு உணவு மற்றும் மருந்து விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் காரணமாக, கைதிகள் கடும் நெருக்கடியில் உள்ளதாக சிறைகைதிகளின் உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமால், கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
32 minute ago
58 minute ago