Janu / 2026 பெப்ரவரி 15 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரகம - ஹொரண வீதியின் கொத்தலாவல சந்திக்கு அருகில் உள்ள வயல்வெளி ஒன்றிற்குப்பக்கத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட, சந்தேகத்திற்குரிய 'FX' ரக மோட்டார் சைக்கிள் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (15) மீட்கப்பட்டதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தளனர்.
மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் மீது கறுப்பு நிற பாதுகாப்பு தலைக்கவசம் (Helmet) ஒன்றும், அதற்கு அருகாமையில் தரையில் கறுப்பு நிற துணியால் தைக்கப்பட்ட புதிய ஜாக்கெட் ஒன்றும் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும், மோட்டார் சைக்கிள் இருந்த இடத்திலிருந்து சில அடி தூரத்தில், வயல்வெளிக்கு அருகில் மஞ்சள் நிறத்திலான அரிசிப் பை ஒன்றினுள் போடப்பட்டிருந்த ஒரு ஜோடி காலணிகளையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
சனிக்கிழமை (14) இரவு வஸ்கடுவ, வாடியமங்கட பகுதியில் சூப் விற்பனை நிலையம் நடத்தி வந்த 33 வயதுடைய நபர் ஒருவரைப் படுகொலை செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் இதுவா என்பது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago