2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வஸ்கமுவ தேசிய பூங்காவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

Gavitha   / 2017 ஜனவரி 18 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வஸ்கமுவ தேசிய பூங்காவில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில், 38 வயதுடைய நபரொருவர் பலியாகியுள்ளார்.
வனவிலங்கு அதிகார சபை அதிகாரிகளுக்கும், வேட்டையாடுபவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போதே, குறித்த நபர் பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, வனவிலங்கு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, வேட்டையாடுபவர்களுடன் தொடர்பை பேணி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், வனவிலங்கு அதிகாரியொருவரும் கைது செய்யப்பட்டார்.

வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, அங்கிருந்த மூவரை சரணடைந்துவிடுமாறு கூறியபோதும், அவர் இந்தத் துப்பாச்சிக்சூட்டுப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .