Editorial / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் 21ஆம் திகதியான உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.
பிற்பகல் 2 மணியளவில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட, முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோன் மற்றும் முன்னாள் செயலாளரான பத்மசிறி ஜயமான்ன ஆகியோர் விசேட தெரிவுக்குழுவில் ஆஜராகவுள்ளனர்.
இதற்கு முன்னரும், என்.கே.இளங்ககோன் மற்றும் பத்மசிறி ஜயமான்ன ஆகியோர் தெரிவுக்குழுவில் முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
31 minute ago
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
35 minute ago
1 hours ago