Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 10 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பம்பலப்பிட்டிய பகுதியில் கடந்த 24ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த பொரளை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி, நேற்று இரவு 8.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பொறுப்பதிகாரி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தப் போது, டிபென்டர் வாகனம் ஒன்றில் மோதப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இவர் மீது மோதிய டிபென்டர் வாகனம் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தது.
இந்நிலையில், இச்சம்பவத்தையடுத்து, டிபெண்டர் வாகன சாரதி உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டதுடன் , அவர்களுள் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய 7 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களுள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மகனும் கொழும்பு நகர சபை உறுப்பினர் சுமிந்த ஆட்டிகலவும் உள்ளடங்குகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago