Editorial / 2025 ஜூன் 13 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்கு ஜூன் 12 புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியானமையும் குறிப்பிடத்தக்கது.
Pratik Josh - கடந்த ஆறு வருடமாக இலண்டனில் வேலை பார்த்து வந்துள்ளார்.அவரது மனைவி டொக்டர் komi vyas. 2 நாட்களுக்கு முன்னதாக - வேலையை ரிசைன் பண்ணிருக்காங்க.. கணவர் மற்றும் 3 குழந்தைகளோடு இலண்டனில் செட்டில் ஆகும் முடிவில் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இப்போது ஐந்து போரும் இல்லை அவங்க இன்றைக்கு flight கிளம்பிய நேரம் எடுத்த Last Selfie வெளியாகியுள்ளது.
இலங்கையின் கண்டிக்கு விஜயம் செய்தபோது எடுக்கப்பட்ட குடும்பத்தின் படம் சர்வதேச ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இருப்பினும், அந்தக் குடும்பம் எப்போது இலங்கைக்கு விஜயம் செய்தது என்பது இன்னும் தெரியவில்லை.
இந்த நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் குடும்பத்துடன் லண்டன் சென்று குடியேற முடிவு செய்து விமானத்தில் பயணித்த நிலையில், குடும்ப உறுப்பினர்கள் 5 பேரும் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பனஸ்வாரா பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கோமி வியாஸ். இவரின் கணவர் பிரதிக் ஜோஷி கடந்த 6 ஆண்டுகளாக லண்டனில் ஐடி துறையில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உட்பட மொத்தமாக 3 குழந்தைகள் இருக்கின்றன. இதனால் லண்டனில் இருந்து அவ்வப்போது ராஜஸ்தான் வரும் பிரதிக் ஜோஷி தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் மொத்தமாக லண்டனில் குடியேற முடிவு செய்து அதற்கான அனைத்து விஷயங்களையும் செய்து, குடும்பத்தினரை அழைத்து செல்வதற்காக இந்தியா வந்துள்ளார்.
இதன்பின் 2 நாட்களுக்கு முன்பாக மருத்துவர் கோமி வியாஸ் தனது பணியையும் ராஜினாமா செய்து லண்டனில் குடியேற தயாராகி இருக்கிறார். இந்த நிலையில் லண்டன் புறப்பட்ட கோமி வியாஸ், பிரதிக் ஜோஷி, மகள் மிராயா, மகன்கள் நகுல் மற்றும் பிரத்யுத் ஆகியோர் விமானத்தில் பயணத்தை தொடங்கி இருக்கின்றனர்.
ஆனால் விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்தில் சிக்கியதால், குடும்பத்தினர் 5 பேரும் உயிரிழந்தனர். புதிய வாழ்க்கையை லண்டனில் தொடங்க புறப்பட்ட குடும்பத்தினர் மொத்தமாக விமான விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விமான விபத்தில் பலியானோரின் உடல்கள் இன்னும் முழுமையாக யார் என்று அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






6 minute ago
32 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
32 minute ago
3 hours ago
4 hours ago