2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

விலை அதிகரிப்பு தொடர்பில் உடனடி நடவடிக்கை

Freelancer   / 2022 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிவாயு விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், அதற்கான விலை கட்டுப்பாட்டுக்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாக, சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உலக சந்தையின் விலை, செலவு, நுகர்வோருக்கு எரிவாயு விற்பனை செய்யப்படும் சில்லறை விலை என்பன குறித்து அவதானம் செலுத்தி, எரிவாயு விலைக் கட்டுப்பாட்டுக்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், அண்மைக் காலமாக சீமெந்து, இரும்பு, வயர் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பல உள்நாட்டு உற்பத்திகளின் விலை அதிகரிப்பு நியாயமானவையா என்பதை ஆராய்வதற்காகவும், அவற்றின் விலைச் சூத்திரம் குறித்து, நுகர்வோர் அதிகார சபையில் முன்னிலையாகி அறிக்கை ஒன்றை வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைக்கு அமைய, அவற்றின் கட்டுப்பாட்டு விலைக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .