2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வீட்டில் வைக்கப்பட்ட மின் இணைப்பை உரிமையாளரே தொட்டார்

Freelancer   / 2022 செப்டெம்பர் 03 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்டபம் அகதிகள் முகாமில் வீட்டில் யாரும் திருடக் கூடாது என்பதற்காக வீட்டின் கதவில் வைத்திருந்த மின் இணைப்பை வீட்டின் உரிமையாளரே தொட்டு மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (2) காலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் ராமலிங்கம் என்பவர் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ராமலிங்கத்தின் வீடு தனியாக இருந்து வருவதால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை திருடர்கள் யாரும் திருடி சென்று விடக்கூடாது என்பதற்காக அவர் வெளியே செல்லும் போதெல்லாம் வீட்டின் கதவில் சுச் போர்ட்டு மூலம் மின் இணைப்பு வைத்து செல்வது வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டின் கதவில் மின் இணைப்பு வைத்திருந்ததை மறந்து மின் இணைப்பு வைத்த ராமலிங்கமே அவரது வீட்டின் கதவை தொட்ட போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மண்டபம் பொலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X