2025 மே 22, வியாழக்கிழமை

வெளிநாடுகளிலுள்ள பாதாள உலகினருக்கு எச்சரிக்கை

S.Renuka   / 2025 மார்ச் 02 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள இலங்கையில் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் கொலைகளை நடத்தி வரும் 293 பாதாள உலக உறுப்பினர்களுக்கு சர்வதேச பொலிஸார் (இன்டர்போல்)  இதுவரை சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு 199 சிவப்பு அறிவிப்புகள், 90 நீல அறிவிப்புகள் மற்றும் 4 மஞ்சள் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பொலிஸாருக்கு சர்வதேச ஆதரவு கிடைத்துள்ளது. 

மேலும், சமீபத்திய நாட்களில் வெளிநாட்டில் இருந்த 19 குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த செயல்முறை தீவிரமடைவதால், குற்றவாளிகள் மற்ற நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம் என்று பொலிஸார் கருதப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X