Nirosh / 2021 மார்ச் 13 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு நாட்டுக்கு வரும் இலங்கையர்களை, அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்துவதுத் தொடர்பில் அரசாங்கம் கவனஞ் செலுத்தியுள்ளது.
இதுத் தொடர்பான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தீர்மானம் இம்மாதம் 15ஆம் திகதி அறிவிக்கப்படுமென இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு நாட்டுக்கு வரும் இலங்கையர்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் விடுவிக்கப்பட வேண்டுமென தான் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பில் கலந்துரையாடியப் பின்னர், இதுத் தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .