2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டுப் பயணங்களை மட்டுப்படுத்தினார் ஜனாதிபதி

Freelancer   / 2022 செப்டெம்பர் 23 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களை அத்தியாவசியப் பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு அரச செலவீனங்களைக் குறைக்கும் நோக்கில் ஜனாதிபதியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அவ்வாறான சுற்றுப்பயணங்களுக்கு அவசியமான அலுவலர் அல்லது குறித்த சுற்றுப்பயணக் கடமைகளுக்கு அத்தியாவசியமான ஒருசிலரை மாத்திரம் பங்கேற்கச் செய்தல் வேண்டுமென ஜனாதிபதியின் குறித்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X