2025 ஜூலை 09, புதன்கிழமை

வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு; குரல் மாதிரிகள் ஒத்துள்ளன

Editorial   / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்ச்சைக்குரிய வௌ்ளை வேன் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டவர்களின் குரல் பதிவுகள் சந்தேக நபர்களின் மாதிரிகளுடன் ஒத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச இராசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கொழும்பு பிரதான நீதவானுக்கு அறிவித்துள்ளார்.

வழக்கின் முதலாவது மற்றும் இரண்டாவது சந்தேக நபர்களாக சரத்குமார மற்றும் அதுலகுமார ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

வேறு ஒரு வழக்கு தொடர்பாக சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (27) நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 3ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மகர சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .