Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 12 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ, ப.பிறின்சியா டிக்சி
நான் வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்த உத்தரவிட்டதை ஒப்புக்கொள்கிறேன். நான் அவ்வாறு உத்தரவிட்டாலும், உனது உத்தரவின் நன்மை, தீமைகள் மற்றும் அவை சட்ட ரீதியானதா, சட்டவிரோதமானதான என அதிகாரிகள் பார்த்திருக்க வேண்டும்' என கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலமளித்துள்ளதாக மின்வலு மற்றும் புதிப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா, தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவிலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றபோது, அவர் இதனைக் கூறினார்.
'நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அரசாங்கத்துக்கு சொந்தமான 40 வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளார். இது சாதாரண தவறு அல்ல. அதிகாரிகளுக்கு வழங்கவேண்டிய இந்த வாகனங்களை அவர் தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளார்.
விமல் வீரவன்ச கைதுசெய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை இல்லை. அவரது இந்த செயற்பாட்டால் 9 கோடி ரூபாய்க்கும் அதிக நட்டம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு பொறியியல் கூட்டுதாபன வாகனங்களை முறைக்கேடாக வழங்கியுள்ளதாக, 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி, பொறியியல் கூட்டுதாபன தலைவரின் ஊடாக நிதிக்குற்றப்ப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதனையடுத்து, நீண்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட 30துக்கும் அதிகமான சாட்சிகள் மற்றும் விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அரசாங்கத்துக் சொந்தமான வாகனங்களை அதனை பயன்படுத்த உரிமையில்லாத நபர்களுக்கு அவர் வழங்கியுள்ளார். வாகனத்தை பயன்படுத்தியமைக்காக கைதுசெய்கின்றீர்கள் என்று கேட்கலாம். இது ஒரு வாகனம் இல்லை. 40துக்கும் அதிகமானவை இதே முறையில் வழங்கப்பட்டடுள்ளன.
இதில் சில வாகனங்கள் அரசாங்கத்தால் வாடகைக்கு வாங்கப்பட்டவை. அவற்றுக்கான வாடகை, எரிபொருள் மற்றும் சாரதிகளுக்களுக்கான சம்பளம் உள்ளிட்டவைகளால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.
வீரவன்ச மற்றும் பொறியியல் கூட்டுதாபன உதவி அதிகாரி சமன் பிரியந்த லெக்குகே ஆகியோரின் ஊடாக இந்த வாகனங்கள் விநியோகிக்ப்பட்டுள்ளன.
தண்டனை சட்டக் கோவையின் கீழ், பல குற்றங்களில் விமல் வீரவன்சவுக்கு எதிராக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளர். சுhதாரணமாக கூறுவதாக இருந்தால், நம்பிக்கையை உடைத்தல், மோசடி செய்தல், அரச மற்றும் பொதுமக்களின் சொத்துகளை வீணடித்தல் உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அரச வாகனங்களை, அமைச்சர்கள், அதிகாரிகள் தமக்கு தேவையான விதத்தில் பயன்படுத்த முடியாது என்பதை அனைவரும் முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதனை செய்தவர்கள் அதற்கு பதிலளிக்க வேண்டும்.
அந்த வாகனங்களை, தனது உறவினர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கியுள்ளார். 40 பேர்களுக்குள் வீரவன்சவின் அக்காவின் இளைய மகனான ரித்ம விமுக்தி வீரவன்சவின் அக்காவின் மூத்த மகனான லலித் புஷ்பக்குமார, விமலின் மனைவியின் அக்காவின் கணவன் ஆனந்த அசோக் குமார, தங்கையின் கணவனான ஆனந்த பிரியதர்ஷன மற்றும் தங்கையான நிலானி வீரசிங்க ஆகியோர் உள்ளிட்டவர்களுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன இது சிறு உதாரணம் மட்டுமேயாகும்' என்றார்.
53 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
3 hours ago
6 hours ago