2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஷெம்போவுக்குள் கொக்ஹெய்ன் சிக்கியது

R.Maheshwary   / 2021 மே 09 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

60 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்ஹெய்ன்  போதைப் ​பொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (9)  காலை 9 மணியளவில் சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதென, சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளரும் பிரதி சுங்க பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த கொக்ஹெய்ன் போதைப் பொருளுடன் தென்ஆபிரிக்காவைச் சேர்ந்த 59 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென்றும் இச்சந்தேகநபர் நைரோபி நகரிலிருந்து தோஹாவுக்கு வருகைத் தந்து, அங்கிருந்து கட்டார் விமான சேவை மூலம் கட்டுநாயக்கவுக்கு வருகைத் தந்துள்ளாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது பயணப்பையில் இருந்த 2 ஷெம்போ போத்தல்களில் 2.29 கிலோகிராம் கொக்ஹெய்ன்  போதைப்பொருள் மறைத்த வைக்கப்பட்டிருந்ததாகவும், இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .