Freelancer / 2026 ஏப்ரல் 30 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
த.வெ.க. தலைவர் விஜய் நேற்று மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய் பாபா கோயிலில் தரிசனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 23 ஆம் திகதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் த.வெ.க. சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு த.வெ.க. ஆதரவு வழங்கியது.
தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு நகங்களில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.
எதிர்வரும் மே 4 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் விஜய் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலிக்குள் சென்று மூலவரான சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். தொடர்ந்து அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் சென்றார். அதன் பிறகு அங்கிருந்து அவர் காரில் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றார். விஜய்யை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். (a)

31 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026